நீலகிரி:கடந்த ஜனவரி 8ஆம் தேதி குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
காட்டேரி நஞ்சப்பசத்திரம் பகுதியில் மீட்புப்பணியில் உடனிருந்த அப்பகுதி மக்களுக்குக் கடந்த 13ஆம் தேதி தென் பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண் விமான விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் கிராமத்தைப் பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து இப்பகுதி மக்களுக்கு ராணுவ மருத்துவமனை சார்பில் ஓராண்டுக்கு மருத்துவ முகாம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தில் மருத்துவ முகாம் இதன் ஒரு பகுதியாக, நேற்று (பிப். 26) மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் இரண்டாவது முறையாக மருத்துவ முகாமினை வெலிங்டன் ராணுவ மையத்தின் காமண்டென்ட் ராஜேஸ்வர்சிங் தொடங்கிவைத்தார். அப்பகுதி மக்களின் உடல்நிலை பரிசோதனை, சக்கரைநோய், ரத்தக் கொதிப்பு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு MRC ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கர்னல் அனில் பண்டிட் வண்டிச்சோலை பஞ்சாயத்துத் தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:குன்னூர் விபத்து நடந்த கிராமத்தில் ராணுவம் சார்பிலான மருத்துவ முகாம்