நீலகிரி:கன்னியாகுமரியில் இருந்து உதகைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெம்போ ட்ரேவலர் வேனில் 23 பேர் உதகைக்கு சுற்றுலா சென்றனர். வாகனத்தை சாஜூகுமார் என்பவர் ஓட்டி வந்தார். உதகையில் சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று (மார்ச் 08) சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பர்லியார் - கேஎன்ஆர் நகர் இடையே சென்று கொண்டிருந்தபோது வாகனம் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதி, தலை கீழாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 16 பேர் காயமடைந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர்.