நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக கரோனா தொற்று ஊரடங்கால் வருவாய் இன்றி தவித்து வரும் மகளீர் குழுக்களுக்கு சுயதொழில் செய்ய கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டு 40 சுயஉதவி குழ பெண்களுக்கு ரூ. 2.5 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
40 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 2.5 கோடி ரூபாய் கடனுதவி - Nilgiri district
நீலகிரி: ஊட்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக 40 மகளீர் சுய உதவி குழுவினருக்கு 2.5 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கபட்டது.
2.5 crore loan to 40 women self help groups
அப்போது கரோனா தொற்று காலத்தில் மட்டும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 40 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கபட்டுள்ளதாக தெரிவித்தார். சுய தொழில் செய்ய பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வட்டியில்லா கடன் வழங்கபடும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.