நீலகிரி மாவட்டத்தில் முக்கிய பண பயிராக விளங்குவது தேயிலையாகும். சுமார் 60 விழுக்காடு விவசாயிகள் தேயிலையை விவசாயம் செய்துவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்தனர். இதன் காரணமாக பல விவசாயிகள் தேயிலைக்கு மாற்று பயிராக கொய் மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கூக்கல் தொரை, தும்மனட்டி, துனேரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கொய் மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய் மலர்கள் பசுமை குடில்கள் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் சில விவசாயிகள் கார்னீசியன் மற்றும் ஜெர்பரா என்ற கொய்மலரை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், பல வண்ணங்களில் பூக்கும் இந்த மலர்கள் மேடைகளை அலங்கரிக்கவும், பொக்கேகளை தயாரிக்கவும் பயன்படுத்தி வருகிறது.