நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் முழு கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இருந்தபோதிலும் பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்து எவ்விதமான விழிப்புணர்வும் இன்றி சர்வசாதாரணமாக உலாவருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், குன்னூரில் 144 தடையை மீறி 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் உலாவந்தவர்களைக் காவல் துறையினர் பிடித்து அபராதம் விதித்துவருகின்றனர்.