தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட திமுக எம்எல்ஏ - Tamil latest news

நீலகிரி: கோத்தகிரி சென்ற திமுக எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட எம்எல்ஏ
குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட எம்எல்ஏ

By

Published : May 15, 2020, 2:39 PM IST

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேர்கம்பை பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ மோகன், தனது குடும்பத்துடன் வந்து தங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் அப்பகுதிக்குச் சென்று அவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி கூறி, அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில், தற்போது அதிக அளவில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், விஐபி-க்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சோதனைச் சாவடியில் தங்கவைத்து, அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி, அதன்பின்பு நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பதுங்கிய சிறுத்தை... பிடிக்க காத்திருக்கும் ஹைதராபாத் படை!

ABOUT THE AUTHOR

...view details