உதகையில் கோடைகாலத்தின் முக்கிய நிகழ்வான 123ஆவது மலர்கண்காட்சி வருகின்ற 17ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
உதகையில் மலர்கண்காட்சி: ஆயத்தப் பணிகள் தீவிரம்! - Flower show
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
123ஆவது மலர்கண்காட்சி
இதற்கான ஏற்பாடுகள் உதகை தாவரவியல் பூங்காவில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அலங்கார மேடையில் அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இன்கா மேரிகோல்டு, பெட்டுனியம், சால்வியா, ஆஸ்டர், லில்லியம், பால்சம், நிமேசியா, ஜெர்புரா, கேலஞ்சியோ, ஜினியா என 200க்கும் மேற்பட்ட ரகங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் மலர்தொட்டிகள் கண்காட்சிக்கு வைக்கபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.