தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி மலை ரயில் சேவை 122 ஆண்டுகள் நிறைவு - நீலகிரி அண்மைச் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டுவரும் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டு நேற்றுடன் (ஜூன் 15) 122 ஆண்டுகள் நிறைவுற்றது.

மலைகளுக்குகிடையே குன்னூர் மலை ரயில் பயணிக்கும் காட்சி
மலைகளுக்குகிடையே குன்னூர் மலை ரயில் பயணிக்கும் காட்சி

By

Published : Jun 16, 2021, 12:10 PM IST

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ஜூன் 15 முதல் மலை ரயில் இயக்கப்பட்டுவருகிறது. நூற்றாண்டைக் கடந்தும் மவுசு குறையாத மலை ரயில், போக்குவரத்து நடைமுறையில் புதிய முயற்சியைப் புகுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஊடே செல்லும் நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையம் – ஊட்டி வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.

இவை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கிறது.

இந்த ரயில் 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால், உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் இடையே பயணிக்கையில் அருவிகள், குகைகள், வன விலங்குகள் உள்ளிட்டவற்றைக் காண முடிகிறது.

மலைகளுக்கிடையே குன்னூர் மலை ரயில் பயணிக்கும் காட்சி

காண்போர் மனத்தை கொள்ளை கொள்ளும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் இந்த மலை ரயில் சேவை தொடங்கி நேற்றுடன் (ஜூன் 15) 122 ஆண்டுகள் நிறைவுற்றது. கரோனா சூழல் காரணமாக மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரி தந்தை ஜான் சல்லிவனின் 233ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details