நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொட்டபெட்டா வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. அங்கிருந்து வெளியே வந்த 12 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை உதகை நகரில் சுற்றித் திரிந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இன்று (நவ. 20) காலை உதகை மிஸ்னரி ஹில்ஸ் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அந்த காட்டெருமை உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டெருமைக்கு உடற்கூராய்வு செய்தனர்.