நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெயந்தி நகரில் வசித்துவரும் பிரசாந்த் (29) என்பவர், கடந்த மூன்றரை ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அலுவலகத்தில் இவர் 15 நாட்கள் விடுப்பு கேட்டதற்கு அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது, பின் அதற்கு சம்பளத்தையும் பிடித்துள்ளனர், இதைப்பற்றி அவரின் மேல் அலுவலர்களான முத்துகிருஷ்ணன், மணிகண்டன், ஆகியோரிடம் வினவியுள்ளார். அதற்கு தகாத வார்த்தைகளில் அவர்கள் பேசி சம்பளம் பாக்கியுடன் பிரசாந்தை வேலையை விட்டு நிரந்தரமாக நீக்கயுள்ளனர்.
5 மாத சம்பள பாக்கியால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி!
நீலகிரி: குன்னூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஐந்து மாத சம்பளம் பாக்கி வைக்கப்பட்டதால், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் கடந்த நான்கு மாதங்களாக இழந்த வேலையை மீண்டும் பெறுவதற்கு பிரசாந்த் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் எதுவும் கைக்கொடுக்காததால், விரக்தியடைந்த அவர் மனமுடைந்து தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் அருந்தியுள்ளார்.
வெகுநேரம் ஆகியும் இவர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் இருந்த பிரசாந்தை குன்னூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதித்தனர். இவருக்கு மருத்துவர்கள் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது உயிர் பிழைத்துள்ளார். இது அவர் குடும்பத்தினர் இடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.