நீலகிரி:குன்னூர், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ பயிற்சி மையத்தில், இளம் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பயிற்சி மேற்கொள்வதற்காகத் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான வீரர் வருகை புரிவார்கள்.
இந்த நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 500க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 101 பேருக்குத் தொற்று உறுதியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அப்பகுதியில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புல்லட்-ஐ ஓட்டிப் பார்ப்பதுபோல், ஓட்டிச் சென்ற காதல் ஜோடி!