தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் கனமழை : 10 கிராமங்களில் மின்தடை - நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை

நீலகிரி: குன்னூரில் பெய்த கன மழை காரணமாக, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

நீலகிரியில் கனமழை
நீலகிரியில் கனமழை

By

Published : Nov 19, 2020, 8:37 AM IST

Updated : Nov 19, 2020, 2:39 PM IST

நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் - கோத்தகிரி சாலையில் நடுஹட்டி அருகே 3 மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இத்தகவலின்பேரில் அப்பகுதிக்கு வந்த குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சாலையில் விழுந்திருந்த மரங்களை வெட்டி அகற்றினர் . இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் மழை காரணமாக மின்தடை

மேலும் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணி நடைபெற்றதால் நேற்று (நவ.18) ஒரு நாள் முழுவதும் குன்னூரைச் சுற்றியுள்ள எடப்பள்ளி, வெலிங்டன் உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

இதையும் படிங்க: பேருந்துக்குள் மழை, குடை பிடித்தபடி பேருந்தை ஓட்டிய டிரைவர்!

Last Updated : Nov 19, 2020, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details