நீலகிரி: நீலகிரி மாவட்டம், மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் வெலிங்டனில் அமைந்துள்ள தங்கராஜ் ஸ்டேடியத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அணிகள் சார்பில் 53ஆவது இன்டர் சர்வீசஸ் கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
மேலும் 10 கி.மீ., நடந்த இந்தப்போட்டியில் 24 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகெண்டனர். இந்தப் போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் கமான்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.