நீலகிரி: உதகையில் முக்கிய சுற்றுலாத் தலமாக உதகை படகு இல்லம் திகழ்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் உதகை ஏரியில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏரி 1823-ல் இருந்து செயற்கையாக இருந்து வருகிறது. ஆரம்பக் காலத்தில் சேரிங்கிராஸ் முதல் காந்தல் முக்கோணம் வரை ஏரியின் பரப்பளவு இருந்தது. அப்போது ஏரியின் தண்ணீர் குடிநீராகப் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் காலப்போக்கில் உதகை நகரில் கட்டப்படும் கட்டடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக உதகை ஏரியில் கலக்கிறது. விவசாய நிலங்களிலிருந்து அடித்து வந்த மண்ணும் படிந்ததால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை மாவட்ட நிர்வாகம் மூலம் ஏரி தூர்வாரப்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்போது கரை பகுதி மட்டுமே தூர்வாரப்பட்டது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஏரியைத் தூர்வாரும் பணி நடந்தது. இதில் கோடப்பமந்து கால்வாய் உதகையில் ஏரியில் கலக்கும் முகத்துவாரத்தில் 2 அடி ஆழத்திற்குப் படிந்திருந்த மண் மட்டுமே அகற்றப்பட்டது. படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 105 மிதி படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:6 கட்டிவிட்டு 45 தடுப்பணைகளுக்கு கணக்கு.. ரூ.30 லட்சம் சுருட்டிய அதிகாரிகள்.. பெரம்பலூரில் நடந்தது என்ன?