தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்! - thanjavur

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தனர்.

செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!
செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!

By

Published : Jun 3, 2021, 5:42 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி, தங்கவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சில வருடங்களுக்கு முன் நகராட்சியில் தற்காலிகப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அவரைப் பணியில் இருந்து விடுவிப்பு செய்ததாகவும், அவருக்கு வர வேண்டிய நிலுவை தொகையும் வந்து சேரவில்லை என நீண்ட நாட்களாக உயர் அலுவலர்களிடம் கோரிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மணிகண்டன் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய வளாகத்திற்குள் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வரவில்லை என்றும், மீண்டும் வேலை வழங்க வேண்டும் என டவரின் மீது ஏறி சத்தம் போட்டு குரல் எழுப்பினார்.

செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!

இதையடுத்து காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தப் பின் அவர் சமாதானமாகி கீழே இறங்கினார்.

இதற்கு முன்பு இரண்டு முறை டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.14 லட்சம் கோடி சந்தை மதிப்பு; புதிய உச்சம் தொட்ட ரிலையன்ஸ் குழுமம்!

ABOUT THE AUTHOR

...view details