தஞ்சை மாவட்டம் பூதலூர் அடுத்த துருசு பட்டியை சேர்ந்தவர் வீரையன்(37). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று இவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது, வீட்டின் மேல் கல் விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது, அவரது உறவினர் குருநாதன் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வீரையனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த வீரையன் மனைவி, அவரை மீட்டு அங்குள்ளவர்களின் உதவியோடு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.