தஞ்சை மாவட்டம், மேல வண்டிக்காரத்தெருவைச் சேர்ந்த இளைஞர் இருவருக்கு நேற்றிரவு(ஏப்ரல்.09) குடிபோதையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உறவினர்களுடன் சென்று, வரவேற்பு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவரிடம் தங்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூறியுள்ளனர்.
அப்போது மருத்துவருக்கும், காயமடைந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் அந்த இளைஞரும், அவருடன் வந்தவர்களும் பயிற்சி மருத்துவரை நாற்காலியால் தாக்கி அங்குள்ள பொருள்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பயிற்சி மருத்துவரைத் தாக்கிய இளைஞர்கள் இதனால் அங்கிருந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதற்குப் பிறகு மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். மேலும் மருத்துவர்களைத் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் தீ விபத்து!