தஞ்சை மாவட்டம் குலமங்கலம் தாந்தோணி கிராமதைச் சேர்ந்தவர் கார்த்திக்(26). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவரோடு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகலட்சுமியின் சகோதரர் விஜய், தனது நண்பரான பிரகாஷ் என்பவருடன் சென்று, வயலில் தனியாக இருந்த கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரை ஏரியில் வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
தங்கையுடன் பேசியதால் அரிவாள் வெட்டு! - tanjore district news
தஞ்சை : தனது தங்கையோடு பேசிய இளைஞரை அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தங்கையுடன் பேசியாதல் அரிவாள் வெட்டு!
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அப்பகுதி மக்கள் ரத்த காயங்களுடன் கிடந்த கார்த்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு காவல் துறையினர் தப்பி ஓடிய விஜய், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் பார்க்க: கரோனா நெருக்கடியில் தொழிலாளர்களைச் சுரண்டுவதை ஏற்க முடியாது: ராகுல் காந்தி