தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள குடியானத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்(42). இவர் தனது தாய் மற்றும் தன் தம்பி ஆகியோருடன் வசித்துவருகிறார். இளம் வயது முதலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய அவர் தினந்தோறும் குடித்து விட்டு வந்து தனது தம்பி மற்றும் தாயை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதேபோல நேற்றும் குடித்துவிட்டு வந்து தனது தாய் மற்றும் தனது தம்பியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவர் தனது தம்பி அசோக்கை மூங்கில் கட்டையால் தாக்கியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பி வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து நாற்காலியில் அமர்ந்திருந்த தனது அண்ணனின் தலையில் தாக்கியுள்ளார்.