தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக 35 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களிடையே மாரடைப்பு மரணங்கள் பதிவாகி வருகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்ரமணியம் தெரிவித்தார். தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ம.சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
அப்போது மருத்துவமனையில் உதடு மற்றும் அன்ன பிளவு நோய் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 708 அரசு மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட நகர்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
இவற்றை பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 35 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. தொடரந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு மரணங்களை தவிர்க்கலாம்.