தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பட்டுவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம். இவரது மகன் விஜயன் (27). இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் ஊரணிபுறத்தில் இருந்து திருவோணம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது பத்துபள்ளிவிடுதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாய் வந்த லாரி விஜயன் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட விஜயன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.