தஞ்சாவூர் மாவட்டம், ஒக்கநாடு மேலையூர் சமயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், அய்யநாதன், சொட்டு. இவர்கள் மூவரும் சேர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி மேய்த்து, விவசாயிகளின் நிலங்களில் கிடை அமைத்துத் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒக்கநாடு மேலையூர் கீழத்தெருவைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளோடு கிடை அமைத்திருந்தனர்.
ஆடுகளை மேய்ப்பதற்காக அழைத்துச் செல்லும்போது 10 ஆட்டுக்குட்டிகளை மட்டும் கவிழ்க்கும் கூடாரத்தில் அடைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பின்பு, மாலை திரும்புகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டுக்குட்டிகள் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்துள்ளன.
தீ வைத்து எரிக்கப்பட்ட கூடாரம் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூவரும் அடையாளம் தெரியாத நபர்களால் கூடாரம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரும்புக்கடையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்