நாடு முழுவதும் உள்ள சிவபக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் திருக்குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 1997ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடமுழுக்கின்போது பயன்படுத்தப்பட்ட கொடிமரமானது அகற்றப்பட்டு, தற்போது புதிய கொடிமரம் நடப்படும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்தப் புதிய கொடிமரமானது 50 ஆண்டுகள் பழமையவாய்ந்தது. மேலும், பர்மாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. இந்தக் கொடிமரத்தின் விலையானது ஒன்பது லட்ச ரூபாய் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.