தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் தலைமை காவலர் சஸ்பெண்ட் - தலைமை காவலர் சிவசங்கரி

சிறையில் இருந்த அதிமுக பிரமுகரை காவல் உடையுடன் பார்க்கச் சென்ற தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் தலைமை காவலர் சஸ்பெண்ட்
தஞ்சாவூர் தலைமை காவலர் சஸ்பெண்ட்

By

Published : Jul 28, 2021, 11:43 AM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சிவசங்கரி (38).

புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை செந்தில் என்பவரை காவல் உடையுடன் சிறையில் சென்று பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எஸ்.பி விசாரணை

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் சிவசங்கரியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில், தலைமை காவலர் சிவசங்கரியை நேற்று (ஜூலை 27) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தற்போது சிறையில் இருக்கும் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை செந்தில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி, பின்னர் சென்னையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரூர் பேருந்து நிலையத்தில் 5 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details