தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் - Woman who tried to set fire

தஞ்சாவூர்: மகனை காட்டுமிராண்டித்தனமாக அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

_fire_reccused_
_fire_reccused_

By

Published : Mar 9, 2020, 8:00 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர், மேலக்குளக்கரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி சம்பத் என்பவரின் மனைவி சிவப்பிரியா(38). இவர்களின் மகன் பாலாஜியை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அதே ஊரை சேர்ந்த ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள சிலர் காட்டுமிராண்டிதனமாக அடித்ததால், கால் கைகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது தொடர்பாக மெலட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால்,வழக்குப்பதிவு செய்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி சிவப்பிரியாவும், அவரது தாய் முத்துலெட்சுமி (58), தங்கை தனலெட்சுமி (35) ஆகிய மூவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர்.

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

அங்கு சென்ற சிவப்பரியா மண்ணெண்ணெய்யை தனக்கு தானே உற்றிக்கொண்டு,த ங்கையின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக அருகிலிருந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'கணக்கு, விலங்கியல் பாடத்தேர்வுகளில் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்க முடியாது' - மாணவர்கள் கவலை

ABOUT THE AUTHOR

...view details