தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார் நான் டாக்டர்... விசாரிக்காமல் தாக்கிய காவலர்: வைரலாகும் வீடியோ - tanjai curfew

தஞ்சாவூர்: ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை கண்டிக்கும்போது விசாரிக்காமல் மருத்துவரையும் காவல் துறையினர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஏங்க நான் டாக்டருங்க... விசாரிக்காமல் தாக்கிய காவலர்
ஏங்க நான் டாக்டருங்க... விசாரிக்காமல் தாக்கிய காவலர்

By

Published : Mar 27, 2020, 9:55 AM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் காவல் துறையினரின் பணிச்சுமை அதிகரித்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்புப் பணி என அனைத்திலும் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரோந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் ஊரடங்கு உத்தரவை மீறி அநாவசியமாக வெளியே வருபவர்களை கடுமையாக எச்சரித்தனர்.

விசாரிக்காமல் தாக்கிய காவலர்

சிலரை லத்தியால் பலமாகத் தாக்கவும் செய்கின்றனர்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை காவல் துறையினர் பலமாக லத்தியால் தாக்கியதில், வலி பொறுக்க முடியாமல், அவர் நான் மருத்துவர் என ஆவேசமாகப் பதிலளித்தார். இதனைக் கேட்ட காவலர், முன்பே சொல்லிவிட்டு போயிருக்கக் கூடாதா என அனுப்பும் காட்சி, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடுமையான நடவடிக்கை எடுப்பது நியாயமாக இருந்தாலும்கூட, விசாரிக்கும்முன் தாக்குவது அறமல்ல, அதிகார துஷ்பிரயோகம் என நெட்டிசன்கள் கொந்தளித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்திய மாவட்ட நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details