தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முத்தழகு பிள்ளை (82), புஷ்பவள்ளி(76) தம்பதி. இவர்கள் இருவரும் திருமணம் ஆன காலம் தொட்டு, இணைபிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்தழகு பிள்ளை உடல்நலைக் குறைவால் உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவிபுஷ்பவள்ளிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் புஷ்பவள்ளியை ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், உறவினர்கள் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருவரது உடல்களையும் ஒன்றாக மயானத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்தனர்.