தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்103 ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய வைத்தியலிங்கம், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணியை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், அதிமுகவை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம். அதற்கு எடப்பாடியும், ஓபிஎஸ்சும் தான் சாட்சி எனத் தெரிவித்தார்.