திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப்போரும் என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக இந்திய அரசு சர்வதேச அளவிலும், பிராந்திய அளவிலும் எந்த வித முயற்சியும் எடுக்காததன் விளைவாகத்தான் ராஜபக்ச சகோதரர்கள் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். சர்வேதச இனப்படுகொலை குற்றவாளிகளான இவர்கள் சர்வேதசத்தின் துணை இல்லாமல் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது. இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஆபத்தானது.