தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு! - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று(ஜுன்.16) நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

By

Published : Jun 16, 2021, 8:09 AM IST

Updated : Jun 16, 2021, 11:55 AM IST

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையைக் கடந்த ஜுன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 892 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூரில் திறக்கப்பட்ட நீர், நேற்று முன்தினம் மாயனூர் தடுப்பணையையும், அதைத்தொடர்ந்து, முக்கொம்பு மேலணையையும் வந்து சேர்ந்தது. முக்கொம்புக்கு நீர் வரத்து 2,000 கன அடியாக இருந்தது.

கல்லணையில் நீர் திறப்பு!

முக்கொம்பில் திறக்கப்பட்டுள்ள நீர் நேற்று(ஜுன்.15) கல்லணையைச் சென்றடைந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காகக் கல்லணையிலிருந்து இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் நீர் திறந்துவிடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்ய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க:குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!

Last Updated : Jun 16, 2021, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details