மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. கூட்டமாக இருக்கும் இடத்தில் இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது.
கோவிட்-19 தொற்று அபாயம்: இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம் முடிவை எட்டியது! - சிஏஏ-வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர்: சிஏஏ-வுக்கு எதிராக 26 நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் இன்று இரவுக்குள் போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து நல்ல முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
பெருந்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து சில இடங்களில் இஸ்லாமியர்களின் காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும் கும்பகோணத்தில் பழைய மீன் மார்க்கெட் அருகே கடந்த 26 நாள்களாக நடைபெற்றுவந்த காத்திருப்பு போராட்டம், நகராட்சி ஆணையர் லட்சுமி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தங்கள் அமைப்பு தலைவர்களுடன் பேசி இன்று இரவு 8 மணிக்குள் நல்ல முடிவை அறிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கருணாசின் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு!