தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா செல்போன் அழைப்பால் உற்சாகமான தொண்டர்! - sasikala thanjore

தஞ்சாவூர்: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்த அதிமுக தொண்டரை, தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

candidate
தொண்டர்

By

Published : May 31, 2021, 11:44 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் சுரேஷ். இவர் தீவிரமான அதிமுக தொண்டர். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து தீவிரமாகக் கட்சி பணியாற்றி தற்போது ஒன்றிய பொறுப்பில் இருந்து வருகிறார்.


இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை கண்ட வினோத் சுரேஷ் மன இருக்கத்துடன் இருந்துள்ளார்

இதையறிந்த சசிகலா, வினோத் அரேஷ்டத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவரின் குடும்ப நலம், உடல் நலம் விசாரித்துவிட்டுக் கவலைப்படாமல் இருங்கள் கரோனா காலம் முடிந்தவுடன் வந்து விடுவேன்" எனக் கூறியுள்ளார்.

சசிகலா அழைப்பால் உற்சாகமான தொண்டர்

இதைக் கேட்ட தொண்டர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். சசிகலா, வினோத் சுரேஷிடம் தொலைப்பேசியில் பேசிய நிகழ்வை அடுத்து உற்சாகமடைந்த இவர் சசிகலாவின் படத்தைத் தனது வீட்டில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடந்த இரண்டு நாள்களில், சசிகலா அவரது தொண்டர்களிடம் பேசிய இரண்டு ஆடியோ கிளிப்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா மீண்டும் அரசியல் களத்திற்குள் கால் பதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details