தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பிடிப்பதற்கு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் அந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்வதற்கு அந்த கிராமத்தின் பஞ்சாயத்து காரர்கள் கூட்டம் சிவன் கோயிலில் நடத்தப்பட்டது.
ஊராட்சிமன்ற தலைவர் பதவி ரூ. 32 லட்சத்துக்கு ஏலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் என்பவர் ஊராட்சிமன்ற தலைவர் பதவியை ரூ.32 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து வெற்றிபெற்றார்.
இதற்காக இரண்டு லட்சம் ரூபாய் முன் தொகையாக கிராம பஞ்சாயத்து காரர்களிடம் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை வரும் 15ஆம் தேதிக்குள் கிராம பஞ்சாயத்து காரர்களிடம் செலுத்திவிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த கிராமத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏல போட்டிகளில் கலந்துகொண்ட இன்னும் மூன்று வேட்பாளர்கள் தங்களை போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலத்திற்கு விடப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க...
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி அரைநிர்வாண போராட்டம்