தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விஜய் பிறந்த நாள்: ரத்த தானம் செய்த ரசிகர்கள்! - தளபதி விஜய் பிறந்தநாள்

நடிகர் விஜய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 15ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

ரத்த தானம் செய்த ரசிகர்கள்
ரத்த தானம் செய்த ரசிகர்கள்

By

Published : Jun 19, 2021, 10:54 PM IST

தஞ்சாவூர்:நடிகர் விஜய்-ன் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க ஒன்றிய தலைவர் ஏனாதி மதன் தலைமையில் 15ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த, முகாமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் விஜய் சரவணன், கரம்பயம் ஊராட்சிமன்ற தலைவர் மேனகா ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கரோனா தொற்றால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு மரியாதை செய்து, அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

இந்த ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மதன் உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய விஜய் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details