தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியாரை இழிவுப்படுத்தியதைக்  கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் - தஞ்சாவூர் செய்திகள்

தஞ்சாவூர்: தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியதைக்  கண்டித்து கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி வழக்குரைஞகள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 18, 2020, 10:33 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைய மீன் மார்க்கெட் அருகில் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்குரைஞர்கள் அணி மாநில பொறுப்பாளர் நந்திவனம் பாலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கோயம்புத்தூரில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய கயவர்கள், பெரியாரை இழிவுப்படுத்தியது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச்செயலாளர் அரசாங்கம், அதிபர் அம்பேத்கர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அண்ணாதுரை, வழக்குரைஞர் அணி மாநில பொறுப்பாளர் நெப்போலியன் ஒளியவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details