தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்பவர் தீபக். இவர் கடந்த 17ஆம் தேதி திருப்பனந்தாள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து சென்றபோது அங்கு சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருந்த நந்தவர்மன் என்பவரிடம் இங்கு டீ விற்கக்கூடாது எனக் கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கடைசியாக காவலர் தீபக் கீழே கிடந்த கட்டையால் நந்தவர்மனை கடுமையாகத் தாக்கினார்.