தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அரசு வேலை தமிழர்களுக்கே: விசிக ஆர்ப்பாட்டம் - Thanjavur district news

தஞ்சாவூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மண்டல அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 24, 2020, 10:38 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கோரி அக்கட்சியின் மண்டல அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் விவேகானந்தன் கூறும்போது, "மத்திய, மாநில அரசுகள் அரசு வேலையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி பேரவை மாநிலச் செயலாளர் அண்ணாதுரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், அதன் செயல் தலைவர் காளிமுத்து, மண்டல பொருளாளர் சசிகுமார், துணைப் பொதுச் செயலாளர் வீரமணி, தொண்டரணி மாநில அமைப்பாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தேனி மக்களுக்கே - விசிக

ABOUT THE AUTHOR

...view details