தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஜா புயல் நிவாரணம்: விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர்.

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

By

Published : Jan 29, 2020, 12:28 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொள்ளைக்காடு, முடுக்குக்காடு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இன்று வரை நிவாரணத் தொகை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், பழஞ்சூர் கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிராம்பட்டினம் காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ஓபிஆர் எம்.பி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி; காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details