தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பெனாசீர் பேகம்(42). இவரது கணவர் முகைதீன் அப்துல் காதர், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
பேகம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தினம்தோறும் இரவு உறவினர் வீட்டில் தூங்குவதை பழக்கமாக வைத்துள்ளார். இதை அடையாளம் தெரியாத நபர்கள், பல நாள்களாக நோட்டமிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்றிரவு (நவம்பர் 14) 8 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு பெனாசீர் பேகம் சென்றார். இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த தங்க காசுகளை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.
இதனிடையே, இன்று (நவம்பர் 15) காலை வீட்டிற்கு வந்த பேகம், பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, உள்ளே சென்று பார்கையில் பீரோவிலிருந்த தங்க காசுகள் திருடு போகினது தெரியவந்தது. அதன் மதிப்பு, ரூ. 40 ஆயிரம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த மதுக்கூர் காவல் துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.