தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பாபநாசம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம்குமார், முன்னாள் பாபநாசம் ஒன்றிய குழு உறுப்பினர் பானுமதி துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு, ஒரு நபருக்கு எட்டு கிராம் தங்கக் காசு வீதம் 268 பயனாளிகளுக்கும் வழங்கினார்கள்.
தாலிக்குத் தங்கம் தரும் விழா - 268 பயனாளிகளுக்கு தங்கக் காசு வழங்கல்! - தஞ்சாவூரில் 268 பயனாளிகளுக்கும் தங்க காசு வழங்கல்
தஞ்சாவூர்: பாபநாசத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 268 பயனாளிகளுக்கும் தங்கக் காசு வழங்கப்பட்டது.
![தாலிக்குத் தங்கம் தரும் விழா - 268 பயனாளிகளுக்கு தங்கக் காசு வழங்கல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4702028-thumbnail-3x2-thsli.jpg)
thanjavur 268 woman recieved gold coins
பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வீதம் 183 பயனாளிகளுக்கும்,பிற பெண்களுக்கு திருமண உதவித்தொகை 25 ஆயிரம் வீதம் 85 பயனாளிகளுக்கும் வழங்கினார்கள். இதில் மொத்தம் 536 பயனாளிகள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தங்கம் வழங்கப்பட்டது
மேலும் படிக்க: 1,500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர்