தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலை! - இளைஞர்கள் தற்கொலை

தஞ்சாவூர்: வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

By

Published : May 23, 2020, 11:52 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை அருகே உள்ள உத்தமர்குடி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், வீட்டில் இருந்தபோது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், சாலியமங்கலம் அருகே வசித்துவரும் செல்வராஜ் என்பவரது மகன் நவீன்குமார் (22), கூலி தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்குச் செல்லாமல் இவர் ஊரைச் சுற்றி வருவதாக பெற்றோர் திட்டியுள்ளனர்.

அதில் கோபித்துக்கொண்ட நவீன்குமார், வீட்டில் இருந்த பேஸ்டை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

உதவிக்கு அழையுங்கள்:

  • அரசு உதவி மையம் எண் - 104சி
  • னேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

ABOUT THE AUTHOR

...view details