தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வானராங்குடி கட்டாரி என்ற இடத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் இரண்டு டிராக்டர்களில் சவுடு மண்ணை இருவர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் ஸ்ரீதேவி, உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட காவல் துறையினர் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், எஸ்.கே. சேம்பர் உரிமையாளருக்கு விற்பனை செய்வதற்காக மணல் அள்ளிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். உடனடியாக ஹிட்டாச்சி இயந்திரம், டிராக்டர் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், சரவணன், விஜயகுமார் ஆகியோரை கைதுசெய்தனர்.