தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கரோனா - Two more corona positive cases including female ward member reported at Thanjavur

தஞ்சாவூர் : பெண் ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : May 28, 2020, 8:53 AM IST

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் ஊராட்சிப் பகுதிக்கு கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்த நபருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வெள்ளாளர் தெருவிற்கு சீல் வைக்கப்பட்டு அங்குள்ள அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 51 வயது பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதேபோல், கடந்த 23ஆம் தேதி சென்னையிலிருந்து காரில் தஞ்சாவூருக்கு திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான விளாங்குடி சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் கீழவாசல் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பின், தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க :அரசு மீன் அங்காடியில் அழுகிய மீன்கள்: முதலமைச்சரிடம் சாரு நிவேதிதா குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details