தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் கவிதா (23), தனது தோழியான செங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வியுடன் படிப்பு விஷயமாக திருக்காட்டுப்பள்ளி சென்றுள்ளார்.
பல மணிநேரமாக இருவரையும் காணாததால் கவிதாவின் தங்கை திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.