ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பத்து பேர் படகு வாங்குவதற்காக கடலூருக்குச் சென்றனர். இதையடுத்து, அவர்கள் படகை வாங்கியபின் அதிலேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மல்லிப்பட்டினம் கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது.
மல்லிப்பட்டினம் கடலில் காணமல்போன மீனவர்களின் சடலங்கள் மீட்பு! - இறப்பு
ராமேஸ்வரம்: படகு கவிழ்ந்து காணாமல்போன ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறுபேர் உயிருடனும், இரண்டு பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
அப்போது, படகில் பயணம் செய்த பத்து மீனவர்கள் மாயமானர்கள். இந்நிலையில், இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காணமல்போன மீனவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டபின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், இரண்டு மீனவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்