தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூ-ட்யூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 சிறுவர்கள்

தஞ்சாவூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட இரு சிறுவர்கள் பிடிபட்டனர்.

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரு சிறுவர்கள் கைது.
யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரு சிறுவர்கள் கைது.

By

Published : May 18, 2021, 5:36 PM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துப்பிள்ளை மண்டபம் ஒத்தைத் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் ஹரிபாலாஜி(17). இவர் வழக்கு ஒன்றில் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குல்சந்த் குமார் என்ற சிறுவனுடன் தொடர்பு ஏற்பட்டு, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது பற்றித் தெரிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, கடந்த 13ஆம் தேதி கும்பகோணம் அருகே சிவபுரம் செல்லும் சாலையில் யூ-ட்யூப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்துள்ளார்.

அதனை அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் (17) வீடியோ எடுத்து நேற்று (மே.18) இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் வெடி குண்டு தயாரித்த ஹரி பாலாஜி மற்றும் அதனை வீடியோ எடுத்த அவனது நண்பர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூ-ட்யூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 சிறுவர்கள் - பிடித்து விசாரித்து வரும் காவல் துறை

யூ-ட்யூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதனை வெடிக்கச் செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை இணைதளத்தில் பதிவு செய்து பெறலாம்!

ABOUT THE AUTHOR

...view details