தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது! - தஞ்சையில் இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது

தஞ்சை: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

tnj
tnj

By

Published : Oct 10, 2020, 6:16 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் மகன் குமரவேல் (32), கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் கார்திக் பாரதி (32).

குமரவேல், கார்த்திக் பாரதி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் இவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் குற்றவாளிகளை கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் சரக காவல் நிலைய ஆய்வாளர்கள் கார்த்திக் பாரதி, குமரவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details