தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர், கடந்த 2018ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி, அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த நிலையில் 32 வயது ஆடவர் ஒருவர், சிறுமியின் அண்ணனை பார்க்க வந்துள்ளார். அப்போது சிறுமியின் காதல் விவகாரம் அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரும் சிறுமியை மிரட்டி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதனைத்தொடர்ந்து தனது காதலனிடம், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளளார்.
இதனையடுத்து அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்துள்ளனர். இதில் சிறுமியின் அண்ணனைப் பார்க்க வந்த 32 வயது ஆடவரே சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என தெரிய வந்தது.