தஞ்சாவூர்:தமிழ்நாட்டின் மிகவும் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளங்கி வருகிறது. இங்கு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து பல்வேறு சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 1 ) அன்று தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரத்ததான முகாம் காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் என 100 பேர் கலந்து கொண்டு நூறு யூனிட் வரை ரத்த தானம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு வார்டு 50இல், ரூபாய் 20 லட்சம் மதிப்பில் இரண்டு நவீன ரத்த சுத்திகரிப்பு வசதிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இக்கருவியினை, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் தொடங்கி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறும்போது, ''தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் தொடங்கப்பட்டு உள்ள இந்த இரண்டு புதிய ரத்த சுத்திகரிப்பு கருவியின் மூலம், ஒரே நேரத்தில் நான்கு நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.