தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காசநோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அம்மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.
தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், நோயாளிகள் மருந்துகள் இன்றி பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக முதல்முறையாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குநர் முகம்மது கலீல் இங்குள்ள நோயாளிகளுக்கு பன்மருந்து தடுப்பு மருந்தை வழங்கினார்.
மேலும் காசநோய் பாதித்த நோயாளிகள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட அவரவர் வங்கிக் கணக்கில் 500 ரூபாயையும் உழவர் அட்டை மூலம் ஆயிரம் ரூபாயையும் செலுத்தப்பட்டு வருகிறது.